வங்கிக்கு செல்லாமலே SBI வங்கியின் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்லலாம் வாங்க
அட்மின் மீடியா
0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் போன் நம்பர் மாற்றுவது எப்படி
இன்டர்நெட் பேங்கிக் வசதியைப் பெற்றவர்கள், தங்களுடைய புதிய மொபைல் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கப் பின்வருமாறு செய்ய வேண்டும்.
1 : முதலில் https://retail.onlinesbi.com/retail/login.htm
என்னும் இணையதளப் பக்கத்தில் உங்களுடைய ஐடி, பாஸ்வேர்டு பதிவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கில் உள் நுழையவும்.
என்னும் இணையதளப் பக்கத்தில் உங்களுடைய ஐடி, பாஸ்வேர்டு பதிவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கில் உள் நுழையவும்.
2 : 'My Account & Profile' என்னும் பகுதியை கிளிக் செய்து, 'Profile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.
3 : 'Profile' பகுதியில் உள்ள 'personal details/Mobile' என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.
4 : உங்களுடைய Profile Password பதிவு செய்து உள்நுழைய வேண்டும். இப்பொழுது, உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்களுடைய வங்கிக் கணக்கோடு பதிவு செய்த
மொபைல் எண் ஆகியவை திரையில் தோன்றும்.
மொபைல் எண் ஆகியவை திரையில் தோன்றும்.
5 : இப்பொழுது, 'Change Mobile number -Domestic only' (Through OTP/ATM/Contact Centre) என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
6 : 'Personal Details -mobile number update' என்னும் புதிய திரை தோன்றும். இப்பகுதியில் 'create request', 'cancel request' மற்றும் 'status' என்னும் மூன்று தேர்வு நிலைகள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.
7 : இங்கு நாம், 'create request' என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதியில்தான் நாம் மாற்ற விரும்பும் புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த, மீண்டும் அதே எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, 'Submit' பகுதியை கிளிக் செய்யவும்.
8 : எண்ணைப் பதிவு செய்தவுடன் திரையில் உடனடித் தகவல் (pop up Message) ஒன்று தோன்றும். அங்கு உங்களுடைய மொபைல் எண்ணை உறுதி செய்தவுடன் OK பகுதியை கிளிக் செய்யவும்..
9 : இப்பொழுது நீங்கள், மாற்றப்பட்ட மொபைல் எண்ணை அங்கீகரிக்க வேண்டும்.
இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1 உங்களுடைய பழைய மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல்
2 ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA)
3 தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல். ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
10 : மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் வைத்திருக்கும் ATM கார்டு வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து ‘OK' கொடுக்கவும்.
11 : உங்களுடைய டெபிட் கார்டுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு எண் திரையில் தோன்றும். 'active/inactive' எனத் தோன்றும் பகுதியில் 'Active' என்பதைக் கிளிக் செய்யவும்.
12 : டெபிட் கார்டு எண், செயல்பாட்டுக்கு வந்த தேதி அல்லது காலாவதியாகும் தேதி, அட்டை உரிமையாளரின் பெயர், ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்த பிறகு சிறு அடைப்புப் பெட்டிக்குள் தோன்றும் கேரக்டர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்த பின்பு ‘Submit' பகுதியை கிளிக் செய்யவும்.
13 : தகவல்களைச் சரிபார்த்த பின்பு 'pay' பகுதியை கிளிக் செய்யவும்.
உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்த பிறகு,
உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்த பிறகு,
உங்களுடைய பழைய போன் நம்பருக்கும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய OTP வரும்.
அதில் வரும் செய்தியினை அப்படியே அதில் கூறப்பட்டுள்ள நம்பருக்கு மெசஜ் அனுப்பவேண்டும்
அவ்வளவுதான் உங்கள் மொபைல் எண் மாறிவிட்டது
Tags: தொழில்நுட்பம்
