சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சவுதிக்கு தப்பிஓடியவரை சவுதில் சென்று கைது செய்த பெண் I P S ஆபிசர்
அட்மின் மீடியா
0
கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சவுதியில் இரண்டு ஆண்டுகளாக பதுங்கி இருந்த குற்றவாளியை, நேரடியாக சவுதிக்கே சென்று குற்றவாளியை பிடித்து வந்த கேரளா கொல்லம் கமிஷனர் மெரின் ஜோசப் ஐ.பி.எஸ்.
கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த 38
வயதான சுனில் குமார் பத்ரன் என்பவர் சவூதி அரேபியாவில் டைல்ஸ் செய்யும் பணியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த
2017-ம் ஆண்டில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுனில் குமார் மூன்று மாதங்களாக தன் நண்பரின் மகளான 13
வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
சுனில் என்பவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தன் பெற்றோரிடம் தனக்கு நடந்ததைப் பற்றி கூறிய பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
சுனில் என்பவரால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தன் பெற்றோரிடம் தனக்கு நடந்ததைப் பற்றி கூறிய பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்நேரத்தில், சுனில் குமார் சவூதிக்கு தப்பித்து சென்றுள்ளார் அதன்பிறகு அச்சிறுமி கொல்லம் மாவட்டத்தில் கரிக்கோடு பகுதியில் இருக்கும் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
எனினும், 2017 ஜூன் மாதத்தில் மனம் உடைந்த போன சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
குற்றவாளியை ஒப்படையுங்கள் என்று சர்வதேச இன்டர்போல் போலீஸிற்கு தகவல் அளித்தும் பயனில்லை. ஆகையால், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு ஆரம்பநிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், 2019 ஜூனில் கொல்லம் கமிஷனராக பொறுப்பேற்ற மெரின் ஜோசப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தார்
இந்நிலையில், 2019 ஜூனில் கொல்லம் கமிஷனராக பொறுப்பேற்ற மெரின் ஜோசப் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தார்
அதில், சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து குற்றவாளி தப்பித்து இரண்டு வருடங்களாக சவூதியில் இருப்பதை அறிந்த பிறகு சுனில் குமாரை கைது செய்யும் முயற்சியை மேற்கொண்டார். சவூதியில் உள்ள குற்றவாளியை கைது செய்ய கொல்லம் கமிஷனர் மெரின் ஜோசப் மற்றும் அவரது குழு நேரடியாக சவூதியில் உள்ள ரியாத்துக்கு சென்றது.
இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தேவையான அனுமதி, ஆவணங்கள் மற்றும் சிபிஐ-யின் உதவி என முறையாக சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளி சுனில் குமார் பத்ரனை மெரின் ஜோசப் மற்றும் அவரின் குழு திட்டமிட்டு கைது செய்து உள்ளனர்.
குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவலை கொல்லம் போலீசார் ட்விட்டரில் ஜூலை 18-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.
குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவலை கொல்லம் போலீசார் ட்விட்டரில் ஜூலை 18-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.