புழல் ஏரியை சீரமைத்த தன்னார்வலர்கள்
அட்மின் மீடியா
0
புழல் ஏரியை சீரமைத்த தன்னார்வலர்கள்
சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியினை சீரமைக்க சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் அரசிடம் உரிய அனுமதி பெற்று இன்று 14.07.2019 காலை 6 மணி முதல் 10 மணி வரை புழல் ஏரியை தூய்மைபடுத்த துவங்கினார்கள் இதில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். முதற்கட்டமாக சுமார் 3 டன் அளவில் குப்பைகள் அகற்றியுள்லார்கள் மீண்டும் அடுத்த வாரம் ஞாயிற்றுகிழமை 21.07.2019 அன்று இரண்டாம் கட்ட பணிகள் துவங்க உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தார்கள்
இதுபற்றி சமீர், மணி, பிரவீன், அவர்கள் கூறியதாவது:
புழல் ஏரியை தூர்வாரி கரையை பலபடுத்த அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் புழல் ஏரியினை தூய்மைபடுத்த அனுமதி அளிக்கபட்டது.
புழல் ஏரியை தூய்மை படுத்த போகின்றார்கள் என்ற தகவல் அறிந்து பலரும் குடும்பமாக குழந்தைகளுடன் கலந்து கொண்டு முதற்கட்டமாக ஏரியில் இருந்த குப்பைகள் அகற்றும் பணி இன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்வது மட்டுமல்லாமல் அடுத்தவாரம், நடக்கும் சீரமைப்பு பனியிலும் கலந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்து கொள்கின்றேன் என்று கூறினார்கள்



