மனிதன் வீடியோ கேம் விளையாட மட்டும்தான் படைக்கப்பட்டானா??
அட்மின் மீடியா
1
இறைவன் மனிதனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக படைத்திருக்கிறான்
ஆனால் மனிதனோ இந்த உலகில் பொடுபோக்கு தனமாக வாழ்வது மட்டுமல்லாமல் கேலிக்கூத்து மற்றும் வீன் விளையாட்டு போன்ற விடயங்களில் ஈடுபடுகிறான்
சரி ஏதோ பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறார்கள் என்று பார்த்தால்
அவர்கள் விளையாடும் விளையாட்டு அவர்களின் உயிரையும் பறித்து விடும் அளவுக்கு இருக்கிறது
சமீப காலமாக பல கேம்கள் உலாவிக் கொண்டிருக்கிறது நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் ப்ளூவேல் எனும் கேம் அந்த கேம் விளையாடும் பொழுது தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகி அதனால் பல பேர் தற்கொலையும் செய்துக்கொண்டனர்.
அந்த வகையில் இன்று பல வீடியோ கேம்கள் குழந்தைகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிறது
எனவே உங்கள் குழந்தைகளை கண்கானித்து இந்த வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம்.
விளையாட்டில் இருந்து விலகி முழு நேரமும் படிக்க வேண்டும் என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம்.
படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுது போக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள்.
அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன் என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள் என்று அட்மின் மீடியா சார்பாக அன்போடு உங்களை கேட்டுக் கொள்கின்றோம்...
இது போன்ற நேரங்களில் இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது என்ன என்பதை சொல்லியாக வேண்டும்
ஆம் இதற்கான முக்கிய காரணம் ஸ்மார்ட் போன் தான்
குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது.
குழந்தைகள் அடிக்கடி அழுது அடம் பிடிப்பார்கள் சாப்பிட, குளிக்க என்று எதற்கு எடுத்தாலும் அடம் பிடிப்பார்கள்.
அதற்காக முதலில் எல்லாம் வீட்டில் இருப்பவர்கள் குழந்தையின் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம்.
ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு கொடுத்து விடுகிறோம்.
இதனால் குழந்தையின் அழுகை தற்சமயம் நின்று விடுகிறது என்று செய்கிறோம்.ஆனால் காலளவில் இது போன்ற பாதிப்புகள் உண்டாவதற்கு காரணியாக அமைந்துவிடுகிறது.
பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கின்றன.
இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள்
.ஒரு வயது குழந்தைக்கு கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து அந்த மொபைல் கையில் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
அதுமட்டும்மில்லாமல் பெற்றோர்களும் அதனைப் பார்த்து பூரித்துப் போகிறார்கள். மேலும் மேலும் அதனைப் பயன்படுத்த குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள்.
ஆனால் மருத்துவத்துறையும் என்றும் சமூக சிந்தனையில் உள்ள அட்மின் மீடியா நண்பர்களும் இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்
பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும் பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது.
அதற்கு காரணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும், பெற்றோர்களும் அவர்களை பூரிப்பில் ஆழ்த்தும் இந்த மொபைல்தான்.
மக்களின் நல்ல மாற்றத்திற்காக அட்மின் மீடியா தளம் நிறைய தகவல்களை எடுத்து கூறிக் கொண்டே இருக்கிறது
ஆனால் மக்களாகிய நீங்கள் இதை கையாளுகிறீர்களா என்பது தெரியவில்லை ஆனால் எங்கள் சமூக பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.....
மாற்றத்தை நம்மிடமிருந்து ஆரம்பித்து மற்றவர்களிடமும் கொண்டுபோய் சேர்ப்போம்.....
இறைவன் நாடினால்☝
Tags: எச்சரிக்கை செய்தி
