Breaking News

கெமிக்கல் பால் என்று ஷேர் செய்யபடும் வீடியோ உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்யும் வீடியோ கெமிக்கல் பால் என்று ஒரு வீடியோவை ஷேர் செய்கின்றார்கள்
 அந்த வீடியோவில் முகம் தெரியாத இருவர் ஒரு கண்ணாடி பாடிலில் இருந்து சிறிது திரவத்தை ஒரு டம்ளரில் ஊற்றுகின்றார்கள். பிறகு அந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றுகின்றார்கள் தண்ணீர் ஊற்றிய உடனே அந்த டம்ளரில் பால் போல் காட்சி அளிக்கின்றது இது தான் கெமிக்கல் பால் இது உடலுக்கு கேடானது என்று பலரும் ஷேர் செய்கின்றார்கள்.

அந்த வீடியோ உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது

அதற்க்கு முன்பாக நாம் சமூக வலைதளத்தில் பரவும் இந்த வீடியோவிற்க்கு தான் மறுப்பு செய்தி அளிக்கின்றோமே தவீர , இதனால் கலப்பட பால் விற்க்கவில்லை என்று கூறவில்லை. 

மேலே பலரும் ஷேர் செய்யும் வீடியோவை உற்று பார்த்தால் தெரியும் அந்த வீடியோவில் உள்ள பாட்டிலில் உள்ளது கருப்பு பினாயில் அந்த கெமிக்கல்தான் தண்ணீர் ஊற்றியவுடன் பால் போல் வெண்மைதரும் 

ஆனால் பால் இல்லை யாரோ சிலர் வேண்டும் என்றே இனையத்தில் பரவவிட்டுள்ளார்கள் பெனாயிலை பால் என்று குடிக்கமுடியுமா என்று யோசித்து பாருங்கள்

ஆதாரம்


https://www.youtube.com/watch?v=8ysiKMMJl-U



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback