Breaking News

இரண்டாம் கட்டமாக புழல் ஏரியை சீரமைத்த தன்னார்வலர்கள்

அட்மின் மீடியா
0

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியினை சீரமைக்க சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் அரசிடம் உரிய அனுமதி பெற்று சீரமைத்து வருகின்றார்கள்



புழல் ஏரியின் ஆலமரம் பகுதியின் பேபி கால்வாய் பகுதியின் 4.5 கிலோமீட்டர் தூரத்தினை அவ்ர்கள் சீரமைத்து வருகின்றார்கள் . இன்று 21.07.2019 காலை 6 மணி முதல் 10 மணி வரை புழல் ஏரியை தூய்மைபடுத்த துவங்கினார்கள் அதில் கடந்த வாரமும் இந்தவாரம்மும் சேர்த்து இதுவரை சுமார்1.2 கிலோமீட்டர் தூரத்தை சீரமைத்தார்கள்



இதில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். முதற்கட்டமாக கடந்த வாரம்  சுமார் 2 டன் அளவில் குப்பைகள் அகற்றி சீரமைத்து இருந்தார்கள். அதேபோல் இரண்டாம் கட்டமாக இன்றும் சுமார்  2 டன் அளவில் குப்பைகளை அகற்றி சீரமைத்துள்ளார்கள். மீண்டும் அடுத்த வாரம் ஞாயிற்றுகிழமை 28.07.2019 அன்று மூன்றாம் கட்ட பணிகள் துவங்க உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தார்கள.



அடுத்தவாரமும்  கல்லூரிமாணவ மாணவியர்கள், மற்றும் தன்னார்வலர்கள், மற்றும்பொதுமக்கள்,என அனைவரும் கல்ந்து கொள்ளவேண்டும் என அதன் ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தார்கள்



புழல் ஏரியை சீரமைக்க கை கொடுங்கள்!
புழல் ஏரியினை சீரமைக்க நீங்களும் பங்கு பெற விரும்பினால் கீழ் கண்ட தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளுங்கள்


தொடர்புக்கு
9362222786

6383639334



9884877507

Give Us Your Feedback