Breaking News

இஸ்லாமிய பெண்களுக்கு மசூதிகளில் இடம் இல்லையா????

அட்மின் மீடியா
0
இஸ்லாமிய பெண்களுக்கு மசூதிகளில் இடம் இல்லையா????


சமீப காலமாக  இந்தியா முழுவதும்  
ஹாட் டாபிக்   பேச்சு  இதுதான்
அதாவது இஸ்லாமிய பெண்களுக்கு மசூதியில் இடமளிக்க வேண்டும் அவர்களின் வணக்கத்தை அவர்கள் மசூதிகளில் நிறைவேற்ற இடம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சுதான்
இது சம்பந்தமாக இஸ்லாம் என்ன கூறுகிறது  இஸ்லாம்  பெண்களை மஸ்ஜிதுக்குள் அனுமதிப்பது கிடையாதா என்று அட்மின் மீடியா களம் கண்டது
பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுவதாக சிலர் நினைக்கின்றனர்.
இது முற்றிலும் தவறாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்தே பெண்கள் பள்ளிவாசலுக்கு தினமும் வந்து தொழுகையில் பங்கெடுத்துகொண்டு வருகின்றார்கள் என்பதே உண்மை
நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்த ஒன்றை யாரும் தடை செய்ய முடியாது.
பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அவர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக பார்ப்பது மற்றும் பின்பற்றுவது  இறைவன் அருளிய அல் குர்ஆனும் நபிகளார் கூறி பொன் மொழிகள் {ஹதீஸ்களை} தான்  செய்யும் தான்
உங்களுடைய பெண்களை பள்ளிகளுக்கு வருவதை விட்டும் தடுக்காதீர்கள் எனினும் அவர்களுடைய வீடுகளில் தொழுவது அவர்களுக்கு சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத்
மேலே கூறிய நபிகளாரின் பொன்மொழிகளை நாம் உற்றுநோக்கினால் பெண்கள் மசூதிகளுக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை
ஆனால் பெண்கள் அவர்களின் வீட்டிலேயே வணக்க வழிபாடுகளை செய்வது ஆக சிறந்த  என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்
மேலும் நபிகளார் அவர்கள் கூறினார்கள்
உங்களின் மனைவியர் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி
இன்னும் இதே போன்று நபிகளாரின் பல பொன் மொழிகள் இருக்கின்றன
மேலும் பெண்கள் மசூதிக்கு போய் தொழ தாராளமாய் அனுமதி அளித்துள்ளது இஸ்லாம்
ஆனால், பெண்களுக்கு வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, சமையல், கணவனை கவனித்துக் கொள்ளுதல், வீட்டு பராமரிப்பு என்று பல பொறுப்புகள் வீட்டில் உள்ளதாலும், மாதாந்திர உபாதை உள்ளதாலும் தொழுகையை  ஆண்களை போல் அத்தனை கட்டாயமாக்கப்படவில்லை.
ஆகையால் பெண்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ள இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது
மேற்கூறிய அனைத்தையும் நாம் ஆராய்ந்து பார்த்ததில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை தாராளமாக பெண்கள் பள்ளி வாசல்களுக்கு செல்லலாம்
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம்.
முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் மக்கா பள்ளிவாசலுக்கு முதலிடம்   அங்கே ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது போல் பெண்களும் நிறைவேற்றுகின்றனர். தொழுகின்றனர்.
எனவே இஸ்லாமிய மார்க்கம் பற்றி அறியாதவர்கள், இஸ்லாம் என்ன சொல்கின்றது என்று தெரியாதவர்கள்  சொல்லும் சொல்லை யாரும் நம்பாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this