Breaking News

ஒரு மெசஜ ஷேர் செய்யும் முன்பு கொஞ்சம் யோசிங்க

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் ஒரு விஷயத்தைப் பகிர்வதற்குமுன் 
இவற்றையெல்லாம் யோசிங்க?
 

சமூக வலைதளங்களில் ஒரு செய்தியினை ஷேர் செய்வதற்க்கு முன்பு  கீழ் கண்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 

ஒரு விஷயத்தைப் பரப்புவதற்கு முன்  சமூகத்திற்க்கு அதனால் என்ன நன்மை என்பதை நன்றாக யோசிக்க வேண்டும்...

என்ன பதிவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய குணாதிசயங்களை மற்றவர்கள் கணிப்பார்கள்...

எனவே தவறான ஒரு விஷயத்தைப் பரப்பும்போது, நாமும் அப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் என்கிற எண்ணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது...

ஆகையால் ஒருமுறை அப்படி தவறான அபிப்ராயம் ஏற்பட்டால் மீண்டும் அதை மாற்றுவது கடினம்...

பகிறக்கூடிய ஒரு விஷயம் அடுத்தவரை முகம் சுளிக்க வைக்கிறதென்றால், அதுபோன்ற விஷயத்தை பதிவு செய்யக் கூடாது... 

செய்திகளில் உண்மைத்தன்மை உள்ளதா? அது எப்போது நடந்தது? 
என்பதை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்...

செய்தி என்னவென்று அறியாமல் பலர் செய்யும் ஷேர்களால் புரளிகளும், 
வதந்திகளும் அதிகம் வைரலாகிறது...

போலியான செய்தியை ஷேர் செய்வதால் நீங்கள் பொய்யன் என்ற பெயர் வாங்கவேண்டி வரும்...

எனவே ஒரு செய்தியை ஷேர் செய்வதற்கு முன்பு உண்மை என்ன வென்று அறிந்து செய்யவது நன்று...

சில விசயங்கள் உண்மையாக இருக்கும் ஆனால் அவை முன்பு நடந்தவையாக இருக்கும்...

அதை பரப்புவதற்கு முன்  சமூகத்திற்க்கு அதனால் பலன் உள்ளதா? என்று யோசிக்க வேண்டும்...

சமூகத்தில் ஒரு பொய் செய்தி பதற்றமான சூழ்நிலையைப் எற்படுத்திக் கொண்டு இருக்கும் போது நமது கருத்து அதை குறைப்பதற்கான வெளிப்பாடாக இருக்க வேண்டும்...

இதனடிப்படையில் உங்கள் பகிர்வுகளை அமைத்துக்கொண்டு சமூக மாற்றத்தை உங்களிடமிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்...

சொல்வது எங்கள் கடமை
என்றென்றும் சமூக பணியில் அட்மின் மீடியா

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback