Breaking News

ரூட் தல மாணவர்களால் பிரச்சனையா வாட்ஸப்பில் புகார் தெரிவிக்கலாம்

அட்மின் மீடியா
0
'கல்லுாரி மாணவர்கள், சட்ட விரோத செயலில் ஈடுபட்டால், அவர்கள் பற்றி, சமூக வலைதளம் வாயிலாக, தகவல் தெரிவிக்கலாம்' என, போலீசார் அறிவித்து உள்ளனர்.



சென்னையில் உள்ள, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 23ம் தேதி, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 'ரூட் தல' என, கெத்து காட்டும், 90 மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆறு மாணவர்கள், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், ரூட் தல என, கல்லுாரி மாணவர்கள், சட்ட விரோத செயலில் ஈடுபட்டால், அவர்கள் பற்றி, சமூக வலைதளங்களில் தகவல் தெரிவிக்கலாம்.'


மேலும் வாட்ஸ் ஆப்'பில், 9087552233 என்ற எண்ணிலும்;

chennai city police என்ற, 'பேஸ்புக், டுவிட்டர்' பக்கங்களிலும் தகவல் தெரிவிக்கலாம்;

தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும், என, போலீசார் நேற்று அறிவித்துள்ளனர்.

Give Us Your Feedback