மதுரை முழுக்க இந்த சிறுமி பற்றிதான் பேச்சு அப்படி என்ன செய்தார் இந்த ஜீனத் ராபியா
அட்மின் மீடியா
0
மதுரை மாவட்டம் பேரையூர் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் மீராமைதீன்.
இவரது மகள் ஜீனத் ராபியா (7). இவர் பேரையூர் அரசு தொடக்கப்பள்ளியில் 2-ஆம்
வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ஜீனத் ராபியா திங்கள்கிழமை வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றபோது, சாலையில் கேட்பாரற்று ரூ.2500 கிடந்துள்ளது. அந்த பணத்தை எடுத்த ஜீனத்ராபியா, தனது வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.
பணத்துக்கு உரிமை கோரி யாராவது வருகிறார்களா என காத்திருந்தனர். ஆனால் யாரும் வராததால், செவ்வாய்க்கிழமை ஜீனத்ராபியாவும் அவரது வகுப்பு ஆசிரியரும் பேரையூர் காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை ஒப்படைத்தனர்

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ஆனி விஜயா அவர்கள் சிறுமியின் நேர்மையை பாராட்டி தாயாரின் முன்னிலையில் அவருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி ஊக்குவித்தார்.
பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் அத்தொகையை பேரையூர் தாலுகா அலுவலகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு போலீஸார் வழங்கினர்.