நம்பாதீங்க!!! பகிராதீங்க!!! அது எங்க செய்தி இல்லை
அட்மின் மீடியா
0
நம்பாதீங்க!!!
பகிராதீங்க!!!
சமீபகாலமாக ஒரு டெக்ஸ்டின் கீழாக நமது அட்மின் மீடியா பெயரை எழுதி ஒரு சில செய்திகள் பரப்பப்படுவதை எங்களால் காண முடிகிறது
ஆனால் அந்த செய்திகள் எங்களால் பரப்பப்படவில்லை
எனவே அது போல அட்மின் மீடியாவின் பெயரில் வரும் அனைத்து செய்திகளையும் முழுமையாக நம்பாமல் எங்களுடைய செய்தி எது என்பதை பிரித்து அறிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
சரி அட்மின் மீடியாவின் செய்திகளை எவ்வாறு உண்மை என்று அறிந்து கொள்வதென்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா???
அதை அறிந்து கொள்ள சில எளிய வழிமுறைகள்
1.அட்மின் மீடியா செய்தியை அதிகாரபூர்வ பிளாக் போஸ்டில் இருந்து செய்தியின் லிங்க் மட்டுமே வெளியிடுவோம்...
2.நாங்கள் பகிரும் செய்தியை எங்களின் அதிகார பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்வோம்...
3.எங்களுடைய அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்வோம்...
4.நாங்கள் பகிரும் செய்தி கட்டாயமாக எங்களுடைய அட்மின் மீடியா குழுமங்களில் தான் முதலில் பதிவு செய்வோம்...
5 எமது செய்திகளை எப்பொழுதும் மொட்டை கடுதாசி போல் போடமாட்டோம் மேலும் ஒரு செய்தியின் கீழாக அட்மின் மீடியா என்ற எங்களுடைய அடையாளத்தை மொட்டையாக பதிவிட மாட்டோம்...
தாங்கள் பயணிக்கும் குழுமங்களில் வரும் சந்தேகத்துக்குரிய செய்திகள் மற்றும் உங்களை சார்ந்தவர்களிடமிருந்து வரும் சந்தேகத்துக்குரிய செய்திகளை ஆராய அட்மின் மீடியாவை அனுகுவதை போன்று...
இது போன்று எங்களுடைய தலத்தின் பெயரில் மொட்யாக வரும் செய்திகளையும் எங்களிடம் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள்...
மேலும் அட்மின் மீடியா பெயரில் பொய் செய்தியையும் பரப்பாதீர்கள்...
Tags: மறுப்பு செய்தி
