மனதை முடமாக்கிய மாயக் கருவி அது என்ன கருவி? படித்து நீங்கள் பயன் பெற?
அட்மின் மீடியா
0
*மனதை முடமாக்கி மனிதனை ஜடமாக்கிய மாயக் கருவி*
ஆம் அந்த மாயக்கருவி ஸ்மார்ட் போனைத் தவிர வேறு இல்லை
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்று இது வெறும் வார்த்தை அல்ல, சமூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் அடையாளம்
ஆனால் இந்த மாற்றம் சமூகத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச்சென்றால் எவ்வித பிரச்சனையும் இல்லை ஆனால் இன்றைய ஸ்மார்ட்போன்கள் மிக பயங்கரமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது
எந்த அளவிற்கு எனில் தூக்கத்தை விட ஸ்மார்ட் போன் பயன்பாடு முக்கியம் என்ற அளவிற்கு சென்றுள்ளது
இதில் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் சிறுபிள்ளைகளை உறங்க வைப்பதற்கு கூட தாய்மார்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்
சிறு குழந்தைகளுக்கு உணவு சாப்பிடக்கூட ஸ்மார்ட் போன் கையில் கொடுத்தால் தான் வேலை நடக்கின்றது
போனில் எனக்கு தெரியாத விஷயம் கூட என் குழந்தைக்கு தெரியுது என்று மற்றவர்களிடம் பெருமைபட்டுக்கொள்வது எவ்வளவு வேதனைக்குறிய விஷயம்
இந்த பழக்கம் நாளடைவில் சிறுவர்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதற்கு காரணமாகின்றது
அதனால் பிள்ளைகள் பெற்றோர்களை மதிப்பதில்லை
மேலும் உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களையும் கண்டு கொள்வதில்லை
பல எதார்த்தமான உண்மையான விஷயங்களையும் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது
மேலும் பிள்ளைகளின் உடல் நலமும் கண்களும் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறது
அதன் இறுதி விளைவு பிள்ளைகள் மரணத்தை நோக்கி செல்லும் அளவிற்கு நேர்கிறது
இதன் பிரச்சனைகளைத் தெரிந்து கண்டிக்க ஆரம்பித்து மொபைல் கொடுப்பதை நிறுத்தினால்
படிக்க சொன்னா படிக்கமாட்டான்
வேலை சொன்னால் செய்யமாட்டான்
நாமாக சரி படிடா போன் கொடுக்கின்றேன் என்று சொல்லும் வரை அடம்பிடிக்கிறார்கள்
மீண்டும் மொபைல் போன் கொடுத்து நாம் அடிமை ஆக்குகின்றோம்
ஆம் நாம் எல்லோரும் அறிந்திருப்போம் புளூவேல் எனும் உயிர் வாங்கும் கேம். இது நம் கண்ணில் தென்பட்ட ஒன்று. இது போன்று இன்னும் கண்ணுக்குத் தென்படாத பலவகை இணைய கேம்கள் ஆப்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன
அனைவரும் விழித்துக்கொண்டு சிறுபிள்ளைகள் கையில் மொபைல் போனை கொடுப்பதை விட்டுவிட்டு உடலுக்கு வலிமையூட்டும் விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள்
வருங்கால சமுதாயம் உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் வாழ போராடுவோம்
என்றும் சமூக அக்கறையில் உங்கள் அட்மின் மீடியா
