பள்ளியில் மாணவிகளுக்கு நடந்தது என்ன ? உண்மை தெரிந்து கொள்ள
அட்மின் மீடியா
1
கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகள் கடத்தலா.? வாட்சப்பில் பரவும் ஆடியோவின் உண்மை என்ன.?
ஸ்கூல் பிள்ளைகள், சின்ன பிள்ளைகள் எல்லோரையும் வடநாட்டுக்கு கடத்தும் கும்பல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அதனால் எல்லோருக்கும் இந்த மெசேஜை ஷேர் பன்னுங்கள் என 0:36 செகன்ட் ஆடியோவுடன்...
பள்ளி மாணவிகள் தரையில் படுத்து உருளுவது போலும், கூச்சலும் குழப்பத்துடன் ஒரு வீடியோவும் ஒரு வாரமாக சமூகவலை தளங்களில் பரவுகிறது.
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
முதலில் அந்த 0:36 செக்கன்ட் ஆடியோவை பேசியவர் யார்.? தெரியது.!
பேசியவர் பெயர் என்ன.? தெரியாது.!
பேசியவர் எந்த ஊரை சார்ந்தவர்.? தெரியாது.!
பேசியவர் காவல்துறைலோ, அல்லது வேறு ஏதேனும் துறையில் வேலை பார்ப்பவரா.? தெரியாது.!
பேசியவர் பத்திரிக்கையாளாரா, அல்லது ஏதேனும் பத்திரிகை துறையில் வேலை பார்ப்பவரா.? தெரியாது.!
பேசியவருக்கு எப்படி இந்த தகவல் தெரியும்.? தெரியாது.!
உங்களுக்கு எப்படி இந்த ஆடியோவும் வீடியோவும் கிடைத்தது.? அது வேறு ஒரு குரூப்பில் வந்தது.!
அந்த குரூப்பில் யார் அனுப்பினார்.? தெரியாது.!
ஆக, ஆடியோவில் பேசியவரை பற்றி எந்த தகவலும் நமக்கு தெரியாது.. இருந்தாலும் நாம் வாட்சப் பரவும் எவனோ பேசிய ஆதாரமற்ற செய்தியை அலசி ஆராயாமல் பரப்பி விடுகிறோம்.
இப்படி கிடைக்கும் செய்திகளை எல்லாம் பரப்பும் நண்பர்கள், ஒரு அடிப்படை உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் தகவல் தொடர்பு இல்லாத கற்காலத்தில் வாழவில்லை, ஒரு விசயத்தை நொடி பொழுதில் உலகெங்கும் அறியும் நவீன காலத்தில் பயணிக்கிறோம்...
பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்தினாலே 24 மணிக்கூரில் கடத்தப்பட்ட குழந்தையையும், கடத்திய குற்றவாளியையும் கண்டுபிடிக்கும் அதிதிறன் வாய்ந்த காவல்துறையினர் வாழும் தமிழகத்தில் நாம் இருக்கிறோம்,
சவாலான பல கிரிட்டிகல் குற்றங்களை நவீன தகவல் தொடர்பு யுக்தியை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் பல்வேறு குற்றங்கள் தடுக்கும் மகத்தான பணிகளை செய்யும் காவல் துறையினர் இருக்கும் தமிழகத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை வடநாட்டினர் கடத்துகின்றனர் என்கிற இது போன்று உறுதி படாத செய்திகளை பரப்பி பொதுமக்களை பீதியடை செய்வதில் என்ன பலன் உள்ளது.???
பள்ளி குழந்தைகளை கடத்தும் கும்பல் பற்றி, காவல்துறையோ ,அரசு துறையோ எச்சரிக்கையாக அறிக்கை விட்டால் நாம் அதை சீரியசாக எடுத்து கொள்ளலாம்.
அதை விட்டு எவனோ, ஊர், பெயர் தெரியாதவன் வாட்சப்பில் ஒரு ஆடியோவும் சம்பந்தமில்லாமல் ஒரு வீடியோவும் பரப்பினால், அதை நம்பி நாமும் பரப்புவது சரியா.??
கூலி வேலை செய்தும், பஞ்சம் பிழைக்க குறைந்த சம்பளத்தில் தமிழகத்தில் வேலைக்கு வரும் வடநாட்டினர்களை சந்தேக பார்வையில் பார்ப்பதும், கெட்டவார்த்தைகளால் திட்டுவதும், அடித்து உதைப்பதும் காட்டுமிராண்டி தனமாக அல்லவா இருக்கும்.
உண்மையில் பள்ளி குழந்தைகளை கடத்தும் கும்பல் குமரி மாவட்டத்திலோ, தமிழகத்திலோ வந்திருந்திருந்தால், அதை அவ்வளவு எளிதாக அரசும், காவல்துறையும் விடாது. சுற்றி வளைத்து எப்போதே அக்கும்பலை சிறையில் அடைத்திருப்பார்கள்.
ஆகவே பொது மக்கள் தைரியமாக இருங்கள், வீண் புரளிகளை நம்பாதீர்கள்.
சமூக வலைதளத்தில் பரவும் செய்திகள் எல்லாமே உண்மையாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கூச்சலும் குழப்பத்துடன் உருண்டு புரளும் பள்ளி மாணவிகளுக்கு நடந்தது என்ன ?
இந்த சம்பவம் 20.06.2019 அன்று ஜம்மு காஷ்மீர் உள்ள கதுவா என்ற இடத்திலுள்ள உள்ள பள்ளிகூடமாகும்.
பொதுவாக பள்ளிகள் ஆரம்பிக்கும் நாட்களில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அழுது அடம் பிடிப்பது இயற்கையான ஒரு விஷயம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே அதே போல் தான் அந்த பள்ளியிலும் நிகழ்ந்துள்ளது.
அவ்வாறு அந்த பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தபொழுது ஆசிரியர்கள் சிறு பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இதைப்பார்த்த மற்ற பிள்ளைகளும் நாமும் அவ்வாறு அழுது அடம் பிடித்தால் நம்மையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என அதைப்போல செய்ய தொடங்கிவிட்டார்கள்.
இந்த செய்தி பள்ளியில் பெரிய மாணவிகளின் மத்தியில் வேறொறு கோணத்தில் பரவ ஆரம்பித்தது...
அதாவது இந்த பள்ளியில் பேய் இருக்கு என்று நம்பிக்கையில்லாத அச்சுருத்தும் சம்பவங்கள் நடப்பது போல செய்திகள் பரவியுள்ளது...
அதன் பின் இந்த சாதாரண வதந்தி பரவி ஒன்றன் பின் ஒன்றாக மாணவிகள் அலறி அழ ஆரம்பித்தனர், வழக்கத்திற்க்கு மாறான செய்கைகள் செய்ததால் மருத்துவர்களுக்கும் , காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பிறகு மருத்துவர்கள் மாணவிகளை பரிசோதனை செய்து இந்த செயல் பயத்தின் காரணமாக வருவது இதற்கு பெயர் mass hysteria மற்றபடி ஒன்றுமில்லை என்று கூறி மாணவிகளுக்கு மருத்துவம் செய்து பயத்தை போக்கி அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவிகளும் அடுத்த நாள் வழக்கம் போல் பள்ளிக்கும் சென்றுவிட்டனர்.
ஒரு சாதாரண விசயம் காட்டு தீ போல் வதந்தியாக எப்படி பரப்பப்படுகிறது என்பதை பாருங்கள்: நன்றி - அட்மின் மீடியா.
ஆதாரம் 1
https://www.youtube.com/watch?v=XHz6de5SEkM
ஆதாரம் 2
https://www.boomlive.in/were-school-students-in-kathua-possessed-by-ghostsa-factcheck/
ஒரு சாதரன விடயம் காட்டு தீ போல் வதந்தியாக எப்படி பரப்பப்படுகிறது என்பதை பாருங்கள்
எனவே உங்களுக்கு வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து பரப்புங்கள்... மேலும் பொய்யான செய்தியை பரப்பாதீர்கள்...
என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா
இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்
இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்
Tags: மறுப்பு செய்தி


Thanks
பதிலளிநீக்கு