Breaking News

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயர் இடம் பெறவேண்டுமா

அட்மின் மீடியா
0
செவ்வாய் கிரகத்துக்கு, 'நாசா' அனுப்பும் விண்கலத்தில், பொதுமக்கள், தங்கள் பெயர்களைப் பொறிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா', செவ்வாய் கிரகத்துக்கு, 'மார்ஸ் 2020 ரோவர்' விண்கலத்தை, அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த திட்டமிட்டுள்ளது.


2021 பிப்ரவரியில், இது, செவ்வாயில் தரையிறங்கும். 1,000 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான தடயங்கள், தட்பவெப்பம் உள்ளிட்ட மாதிரிகளைச் சேகரிக்கும்.


இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியுள்ளது.


செப்., 30 வரை, பொதுமக்கள், தங்கள் பெயர்களை, விண்கலத்தில் பொறித்துக் கொள்வதற்கான வாய்ப்பை, 'நாசா' வழங்கியுள்ளது.




என்ற இணையதளம் மூலம், பெயர்களைப் பதிந்து, தங்கள் பெயருடன் கூடிய அடையாள பயணச்சீட்டை பெற முடியும்.
இதுவரை 76 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயர்களைப் பதிவிட்டுள்ளனர்.

Give Us Your Feedback