Breaking News

நவீன உலகத்தில் மனிதனின் நிலை

அட்மின் மீடியா
0
*நவீன உலகத்தில் மனிதனின் நிலை!?*




இந்த தலைப்பில் நாம் மனிதனுக்குப் சாதகமாகவும் அல்லது பாதகமாகவும்  பல பக்கத்தில் பதிவுகள் எழுதலாம்...

அவ்வாறாக பல பதிவுகள் எழுதுவதை விட ஒரு சில முக்கிய விடயங்களை கூறி மனிதனின் நிலையை விளக்க அட்மின் மீடியா மூலம் ஆசைப்படுகின்றோம்...

வாருங்கள் எங்கள் ஆசையை வெளிபடுத்துகின்றோம்...

நவீன உலகத்தில் அனைவரும் இயந்திர வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம்...

உடம்புக்கு ஓய்வு கொடுக்க ஆதிமனிதன் தூங்க ஆரம்பித்தான்...

டீவி,ரேடியோவுக்கு ஓய்வு கொடுக்க இடைக்கால மனிதன் தூங்க ஆரம்பித்தான்...

மொபைல் ஃபோனுக்கு ஓய்வு கொடுக்கத்தான் நவீன மனிதன் தூங்கிக்கொண்டு இருக்கிறான்...

அந்த அளவிற்க்கு இயந்திரத்தோடு இயந்திரமாகவே இன்றைய நவீன மனிதன் வாழ்கிறான்.

கடந்த நூற்றாண்டின் இறுதி வரை மனிதன் இயற்க்கை ஒட்டியே தனது வாழ்க்கையின் பயனத்தை தொடர்ந்தான்...

அன்றைய மனிதன் ஒரு இடத்தில் இருந்து மற்றொறு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் குறைந்தது சில  கிலோ மீட்டர் தூரம் நடந்தான்.

ஆனால் அந்த நிலை படி படியாக மாறி தற்போது மனிதன் அருகிலுள்ள இடத்திற்கும் வாகனத்தில் தான் செல்கின்றான்...

தற்போது மனிதன் கையில் மொபைல் போன், தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் மூலை முடுக்குகளிலும் கிடைக்கப் பெற்றதின்   காரணமாக டென்ஷன் என்ற சொல் குழந்தைகளின் முதல் சொல் ஆகிவிட்டது. 

மேலும் சிறு வயதிலேயே மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 

எந்த துறையில் இருப்போரும் மன அழுத்தத்துடனேயே இருக்கின்றனர்.

தற்போதைய சூழலில் மனித மனங்கள் பழமையை விட்டு விடவும் முடியாமல், புதுமையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இரண்டும்கெட்டான்  வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்...

மேலும் மனம் விட்டு பேச சில நல்ல உறவுகள், நட்புகள் இல்லாமல் குறுகிய வட்டத்தில் வாழவேண்டிய நிலைக்கு தன்னைத்தானே ஆற்படுத்திக்கொள்கின்றார்கள்...

மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் (கெடுதி) தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.

(அல்குர்ஆன் : 41:49)

நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.

(அல்குர்ஆன் : 11:9)

மேலே உள்ள இறை வசனத்தை இன்று மனிதனின் நிலையுடன்  ஒப்பிடும்போது அது சரியாகவே உள்ளது.

அன்றோ விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்பாக மனிதனின் தேவைகள் குறைவு அதனால் நிம்மதியாக போதும் என்ற மன நிலையில் வாழ்ந்தான்...

ஆனால் இன்றோ இருப்பதை விட்டு  பறப்பதற்கு ஆசை படுவதால், போட்டி, பொறாமை, மன உளைச்சல், வியாதி என்ற பல நிலைகளுடன் ஏனோ தானோ என்று வாழ்கின்றான்...

அதில் இன்னும் ஒரு சிலர் வாழ்கையில் எதிர் நீச்சல் அடிக்க துணிவு இல்லாமல் வாழ்கின்றார்கள்...

இந்த விடயங்கள் அனைத்தும் தற்போது யாரையும் விட்டு வைக்கல்லை...

காலங்கள் மாறிவிட்டன என்பது உண்மைதான் ஆனால் மனிதனின் அடிப்படை தேவைகள் அப்படியே இருக்கின்றன. அன்புக்காகவும் பாசத்துக்காகவும் ஏங்கும் மனிதர்களும் காலம் காலமாக இருந்தவண்ணமே இருக்கின்றனர்...

அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க துடிக்கிறார்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்... 

பொருளாதார அழுத்தங்களை சமாளிப்பது எப்படி???

திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவது எப்படி???

ஒழுக்கம் மற்றும் தார்மீக மதிப்பீடுகளை தங்கள் பிள்ளைகளின் மனங்களில் ஊன்றச்செய்வது எப்படி போன்ற சிந்தனைகளை இன்றும் மனங்களில் ஓடிக் கொண்டுதான் உள்ளது...

இவைகள் அனைத்தும் நவீன வாழ்க்கைக்கு நடைமுறையானவை தேவையானவையும் ஆகும்.

மேலும் குலம், தேசம், இனம் என்னும் சுவர்களால் இன்று மக்கள் பிளவுபட்டுள்ளனர். இவ்வாறு எழுந்துள்ள இந்தச் செயற்கை சுவர்கள், உலகெங்கிலும் மனித மனங்களில் போர் என்னும் போர்வையில் மக்களைக் கொன்று குவிப்பதில் பங்கு வகித்துள்ளன. 

இவைகள் அனைத்தையும் சரி செய்வதற்க்கு மக்கள் மனங்களை கவர்ந்திழுத்து, சமத்துவம் என்னும் மனப்பான்மைகளை அவர்களுக்குள் போற்றி வளர்க்க கொஞ்சம் முயற்சித்துப்பாருங்கள்.

ஆனால், மனித மனங்களை மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல.

அந்த மனங்களை மாற்றவே நாங்கள் ஆசைப்படுகின்றோம் போராடிக் கொண்டிருக்கின்றோம்...

அந்த மனங்கள் என்றாவது ஒரு நாள் மாறும் இந்த பேராசை என்றாவது நிறைவேறும் என்று எங்கள் சமூக பணியை என்றும் தொடர்ந்து கொண்டே இருப்போம்...


*என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா...*

Give Us Your Feedback