தபால் மூலம் கல்லூரி படிப்பு படிப்பவர்கள் படிப்பு செல்லுபடியாகுமா! அரசு வேலை கிடைக்குமா
அட்மின் மீடியா
0
தொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா?
தொலைதூர கல்வியில் இரண்டு வகை உண்டு.
1. ப்ளஸ் டூ முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லமுடியாமல் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்விமுறையில் சேர்ந்து படிப்பது;
2. ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாமல் திறந்தநிலை கல்விமுறையில் நேரடியாகப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது.
சில வருடங்களுக்கு முன்புவரை, திறந்தநிலை கல்விமுறையில் படிப்பதும், தொலைநிலைக் கல்விமுறையில் படிப்பதும் ஒன்றாகத்தான் கருதப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப்பணிக்கு எடுக்கக்கூடாது' எனத் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் இதை உறுதிசெய்தது.
இதையடுத்து, ப்ளஸ்டூ முடித்துவிட்டு தொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் மட்டுமே செல்லுபடியாகும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
ப்ளஸ் டூ முடிக்காமல், திறந்தநிலைக் கல்விமுறையில் பெறும் பட்டங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே பயன்படும்.
தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றால், பணிகளுக்குச் செல்லவும், உயர்படிப்புகளுக்குச் செல்லவும் அது பயன்படும். ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாத பட்சத்தில் அந்தப் பட்டத்தின் அடிப்படையில் உயர்கல்விக்குச் செல்லமுடியாது. பணியும் கோரமுடியாது
Tags: கல்வி செய்திகள்
