Breaking News

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட இளைஞர் மீது கத்தி குத்து

அட்மின் மீடியா
0

 வட மாநிலங்களில் நடந்தது தற்போது தமிழகத்திலும்  



நாகை அடுத்துள்ள பொரவச்சேரியைச் சேர்ந்த முஹம்மது பைசான். இவர் நேற்றைய தினம் நண்பர்களுடன் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டுள்ளார்.

இதனை புகைப்படம் எடுத்து, அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் முஹம்மது பைசான் வீட்டிற்கு சென்று, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
  
 
இந்த தாக்குதலின் போது இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்இதில் முஹம்மது பைசான் பலத்தகாயமடைந்தார்.  அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் முஹம்மது பைசான் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்அப்பகுதி மக்கள் அவரை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இந்த சம்பவம் குறித்து முஹம்மது பைசான் சார்பில் புகார் அளிக்கப்படத்தைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி சேர்ந்த 20 குண்டர்களை போலீசார் தேடி வருகின்றார்

Give Us Your Feedback