Breaking News

பிரானா மீனிடம் மாட்டி கொண்ட சிறுவன் எலும்புகூடாக காட்சி தரும் வீடியோவின் உண்மை என்ன

அட்மின் மீடியா
3
பிரானா மீன்கள் என்று ஒரு வகை மீன் உண்டு. ஆற்றில் அந்த மீன் கும்பலிடம் மாட்டிக்கொண்ட சிறுவனை 5 நிமிடத்தில் அதன் இரையாக்கி வெறும் எலும்பு கூடு தான் மிஞ்சியது என்று பலரும் ஒரு மெசஜையும் எலும்புகூடு வீடியோவையும்  ஷேர் செய்கின்றார்கள்







அந்த வீடியோ உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது

இந்த செய்தியினை படிக்கும் முன்பு பிரானா மீன்கள் கடித்து மனிதனை உண்ணக்கூடியது தான் ஆனால் இந்த வீடியோ பற்றிதான் நாம் கூறுகின்றோம்
அந்த வீடியோவில் அட்மின் மீடியா டீமின் சந்தேகங்கள்

  • அந்த பிரானா மீன் சிறுவனை சாப்பிட்டது உண்மை என்றால் அந்த சிறுவனின் உடை மட்டும் எப்படி அப்படியே இருக்கின்றது?

  • அந்த சிறுவனை பிரானா மீன் சாப்பிட்டது உண்மை என்றால்  காலில் ஷூ மட்டும் அப்படியே உள்ளது

  • அந்த சிறுவனை பிரானா மீன் சாப்பிட்டது உண்மை என்றால்  எலும்புகள் மட்டும் ஜாயிண்ட்டாக உள்ளதே எப்படி?

  • அந்த சிறுவனை பிரானா மீன் சாப்பிட்டது உண்மை என்றால்  அந்த சிறுவனின் தோள்பட்டையில் உள்ள கை யில் இரும்பு பட்டை எப்படி உள்ளது?

  • அந்த சிறுவனை பிரானா மீன் சாப்பிட்டது உண்மை என்றால்  கையில் உள்ள விரல்கள் எப்படி அப்படியே உள்ளதே?

  • அந்த சிறுவனை பிரானா மீன் சாப்பிட்டது உண்மை என்றால்  தலையில் உள்ள முடி அப்படியே உள்ளது எப்படி?

இந்த சந்தேகங்களுடன் பார்த்தால் அந்த  வீடியோ செய்தி உண்மை இல்லை என்றே தெரிகின்றது மேலும் இனையத்தில் பல ஆண்டுகளாக இந்த செய்தி பலநாட்டில் நடந்தது போல் அடிக்கடி செய்தி வெளிவருகின்றது

மேலும் அந்த சிறுவனின் மூக்கை பார்த்தால் நன்றாக தெரியும் அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை என்று  


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

மேலும் இந்த செய்தி பற்றி உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. கேனத்தனமாக இருக்கிறது உங்கள் சந்தேகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மை எது பொய் எது என்று கூட பாராமல். வாயும் வாட்சாப்பும் இருகின்றது என்று கண்டபடி உம்மை எம்மையிம் போல பலர் பரப்பும் பொய் செய்திகலை ஆராய்ந்து உண்மையான செய்திகள் தரும் நபரின் சந்தேகம் உங்களை போன்றவர்கல்ய்க்கு கேனத்தனமாகத்தான் தெரியும்...

      நீக்கு
  2. நன்றி அட்மின்.
    அதுபோக இது.மிக பழைய செய்தி
    இதை நம் அட்மின் குரூப் முன்பே உண்மை தன்மையைய் சொல்லிவிட்டது என்பது குறிபிடதக்கது

    பதிலளிநீக்கு