Breaking News

போன் பேசும் பொழுது மின்னல் தாக்கி ஒருவர் இறந்தாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
போன் பேசும் பொழுது மின்னல் தாக்கி ஒருவர் இறந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் ஒரு செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்


இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது


செல்போன் பேசும் பொழுது மின்னல் தாக்கியதில் ஒருவர் இறந்துள்ளார் என்ற ஆடியோ உடன் கருகிய நிலையில் இருக்கும் உடல் மற்றும் காரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா ஆராய்ந்து பார்க்கும் பொழுது

2018 ம் ஆண்டு அரபு நாட்டில்  சூப்பர்மார்க்கெட்டில் மேனேஜராக பணியாற்றி வந்த ரமேஷ் என்பவர் இந்தியா திரும்பி உள்ளார். அந்தநேரத்தில் அரக்கோணத்தில் அவர்களின் நண்பரின் மீன் பண்ணையை பார்க்க செல்லும் பொழுது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரமேஷ் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது மின்னல் தாக்கியதில் உடன் இருந்த பிரபாகரன் மற்றும் இரு நண்பர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆனால். ரமேஷ் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். செல்போனில் பின் பகுதி மின்னல் தாக்கியதில் செல்போன் உருகி இருந்தாக ரமேஷின் நண்பர் பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.

 ஆதாரம் 1

https://www.maalaimalar.com/news/district/2018/06/07033709/1168365/Lightning-attacked-young-man-killed.vpf


  ஆதாரம் 2

 https://gulfnews.com/going-out/society/viral-images-of-burnt-body-not-of-chennai-expat-1.2235302

அவர் செல்போன் பேசும் போது மின்னல் தாக்கி இறக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்


ஆனால் சமூக வலைதளங்களில் அந்த படத்துடன் ஓர் கார் படமும் ஷேர் செய்யபடுகின்றது அந்த படம்

கடந்த 2018-ல் கேரளா அம்பலக்குலங்குறா எனும் பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் காரில் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காரின் உள் பகுதியில் தீ பரவி இருந்ததால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கேரளாவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியில் அந்த கருப்பு நிற கார் இடம்பெற்று இருக்கிறது.


ஆதாரம் 3

https://english.manoramaonline.com/districts/kozhikode/2018/06/06/retired-teacher-charred-death-car-suicide-suspected.html


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html

 
 
மேலும் இந்த செய்தி பற்றி உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback