1200 ஆண்டு பழமையான மசூதி பாலஸ்தீன பாலைவனத்தில் கண்டுபிடிப்பு
அட்மின் மீடியா
0
பாலஸ்தீனத்தில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் பாலைவனத்தில் இஸ்ரேலிய தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மசூதி ஒன்றின் சிதிலங்களைக் கண்டறிந்தனர்.
1200 ஆண்டு பழமையான மசூதியாக இருக்கக் கூடும் என்றும், விவசாயிகள் இந்த மசூதியைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
மெக்கா உள்ள திசையை நோக்கி அமைக்கப்பட்ட மசூதியில் தொழுகைக்கான இடமும் உள்ளது.
மெக்கா உள்ள திசையை நோக்கி அமைக்கப்பட்ட மசூதியில் தொழுகைக்கான இடமும் உள்ளது.
மசூதிக்கு அருகே சில கட்டிட சிதிலங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அது பைசாண்டியர் காலத்திய குடியேற்றவாசிகளின் பண்ணையாக இருந்திருக்கக்கூடும் என கருதுகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் தங்கள் ஆய்வுகளைத் தொடர உள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
மேலும் அந்தப் பகுதியில் தங்கள் ஆய்வுகளைத் தொடர உள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்
அன்றைய மசூதியின் வீடியோவை காண