Breaking News

புழல் ஏரி 3ம் கட்ட பணி - ஏரியை சீரமைத்த தன்னார்வலர்கள்

அட்மின் மீடியா
4

 

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியினை சீரமைக்க சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் அரசிடம் உரிய அனுமதி பெற்று 3ம் கட்ட சீரமைப்பு பணி  இன்று 28.07.2019 காலை 6 மணி முதல் 10 மணி வரை தன்னார்வலர்கள் புழல் ஏரியை தூய்மைபடுத்த துவங்கினார்கள் 




ஏற்கனவே இவர்கள்  கடந்த 2 கட்ட பணிகள் முடிந்துள்ளார்கள் மேலும் நேற்று  சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் முதற்கட்டமாக சுமார் 3 டன் அளவில் குப்பைகள் அகற்றியவர்கள் இரண்டாம் கட்ட பணியிலும் 3 டன் குப்பைகள் அகற்றியவர்கள் 3 ம் கட்ட பணியிலும் 3 டன் குப்பைகளை அகற்றினார்கள்





மீண்டும் அடுத்த வாரம் ஞாயிற்றுகிழமை 04.08.2019 அன்று நான்காம் கட்ட பணிகள் துவங்க உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தார்கள


மேலும் புழல் ஏரியை  தூய்மை படுத்த  நீங்களும் பங்கு பெறலாம்





எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் செய்யும் மகத்தான பணி இது, அவர்களுக்கு நீங்களும் கை கொடுக்கலாம்



எதிர் வரும் 04.08.2019   ஞாயிற்றுகிழமை அன்று புழல் ஏரியை தூய்மை படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது
நாளைய தலைமுறைக்காக!! 

இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள் ! 

சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!


இடம்: செங்குன்றம் திருவள்ளூர் சாலை, ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில், புழல் ஏரி உட்புறம்
நேரம்:  காலை 6.00 மணி


தொடர்புக்கு
 9362222786

 6383639334

 9884877507
 
 
மேலும் இந்த செய்தி பற்றி கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸ்ஸில் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Give Us Your Feedback

4 Comments