Breaking News

2019 - 2020 பட்ஜெட் சிறப்பம்சங்கள்

அட்மின் மீடியா
0

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட் சிறப்பம்சங்கள் :

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும்.

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

நாடு முழுவதும் பயணம் செய்ய ஓருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை வழங்கப்படும்.

2024 ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர்

தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்

சர்வதேச வேலைவாய்ப்புக்களை பெறும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

புதிதாக உருவாகும் தொழில்களுக்கென பிரத்யேக டிவி சேனல்

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2% ஆக இருக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்.

பான் அட்டையைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இனி கட்டணம் கிடையாது.

ரயில்வே திட்டங்களை மேம்படுத்த 2030 ம் ஆண்டில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்

சிறு, குறு, நடுத்த தொழில்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி முதலீடு

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி

வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்கள் பயன் படுத்தபடும்

ஒரே நாடு ஒரே மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்

வீட்டு வாடகை ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்படும்

பிரதம மந்திரி கர்மயோகி திட்டம் அமல்படுத்தப்படும்.

2022 ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.

பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33,000 கி.மீ., தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும்.

2022 க்குள் 1.95 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித்தரப்படும்

விண்வெளி வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் அமைக்கப்படும்.

Share this