Breaking News

1600 குடும்பத்தை சேர்ந்த 8000 பேர் இஸ்லாமிய மதம் மாறுகின்றார்களா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலர் ஷேர் செய்யும் செய்தி



தப்ரேஷ் கொலைக்கு சரியான நீதி கிடைக்கா விட்டால் நாங்கள் 1600 குடும்பத்தை சேர்ந்த 8000 பேரும் இஸ்லாத்தை தழுவோம். என்று ஒர் வீடியோவை ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


அந்த வீடியோவின் உண்மை என்ன???


உத்திரப்பிரதேசத்தில் இரண்டாயிரம்திற்க்கும் அதிகமான தற்காலிக ஆசிரியர்களாக பணி செய்து வந்தனர்.


அவர்கள் நிரந்தரமாக பணி வேண்டும் என்பதற்காக பல கட்ட போராட்டம் நடத்திவருகின்றார்கள்...


நடத்தப்பட்ட போராட்டங்களில் சில மொட்டை அடித்தனர்... ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற பல கட்டப் போராட்டங்கள் கவனத்தை  ஈர்க்கும் படி நடத்தியுள்ளார்கள்...


அதில் ஒன்றுதான் நாங்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறுவோம் என்று கூறியது


மேலும் இந்த சம்பவம் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தவை


இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்ததை தற்போது தப்ரேஸ்க்கு எதிராக நடந்தது என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.


*இந்த சம்பவத்தை தப்ரேஸ் பிரச்சனையுடன் சம்மதப்படுத்தி அனுப்பியவர்கள் எந்த நோக்கத்தில் அனுப்பினார்கள் என தெரியவில்லை*


*ஆனால் எது எப்படி இருந்தாலும் இது முற்றிலும் பொய்யான செய்தி, இஸ்லாம் பொய்யை ஆதரிப்பதில்லை*.


*நூதனம், கவனம் ஈர்ப்பு என்று எதை காரணம் காட்டி செய்தாலும் பொய் ஒரு போதும் உண்மையயாக மாறாது.*

ஆதாரம்




எனவே பொய்யான செய்தியை SHARE செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback