Breaking News

ஏரிகளை தூர்வார 10 நிபந்தனைகள்

அட்மின் மீடியா
0
நீர்நிலைகளை துார்வாரி சீரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது



தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்வமுடன் நீர்நிலைகள் சீரமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கான அனுமதி பெற 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன


1. ஏரிகளில் உள்ள களை அகற்றி அருகில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேர்க்க வேண்டும்


2. ஏரி கரையின் மீதுள்ள செடி கொடி முட்புதர்களை மட்டுமே அகற்ற வேண்டும்


3. ஏரியின் நீர் பிடிப்பு பகுதியிலிருந்து எடுக்கப்படும் மண்ணை கரையை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும் மண்ணை வெளியில் எடுத்துச் செல்ல கூடாது


4. துார்வாரும் பணியின் போது நீரியல் அமைப்புகளான கரை மதகுகள் கலங்கல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த கூடாது


5. ஏரியின் எதிர் வாயிலை சுற்றி குப்பைகள் கழிவுகள் கொட்டப்படாத வகையில் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்


6. ஏரிக்குள் துார்வாரும் பணிகள் துவங்கும் முன் நீர்வள ஆதாரத் துறையின் பிரிவு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்


7.ஏரியில் துார்வாரும் பணிகளை அனுமதி வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்


8. துார்வாரும் பணிகள் துவங்கும் முன் துவங்கிய பின் முடிந்த பின் ஆகிய மூன்று நிலைகளில் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுக்க வேண்டும். அனுமதி பெற்ற அமைப்பின் பொறுப்பாளர் இந்த புகைப்படங்களை நீர்வள ஆதார துறையிடம் ஒப்படைக்க வேண்டும்


9. பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்படா விட்டாலோ தொழில்நுட்ப ஆலோசனையின்படி பணிகள் மேற்கொள்ளப்படா விட்டாலோ எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அனுமதி ரத்து செய்யப்படும்


10. ஏரிகளில் சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; பணிகள் முடிந்தபின் ஏரிகளின் மீது எவ்வித உரிமையும் கோர முடியாது.


இந்நிபந்தனைகளுக்கு உட்படும் அமைப்புகள் மட்டுமே துார் வாரும் 
பணிகளில் ஈடுபட முடியும்.


காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகளை துார்வார தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் அனுமதி கடிதங்களில் இந்த நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Give Us Your Feedback