Breaking News

10 ஆயிரத்திற்க்கு மேல் மின் கட்டணம் கட்டனுமா முதல்ல இத படிங்க

அட்மின் மீடியா
0
ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துவோரிடம் காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்தவேண்டும்
மின்வாரியத்தில்  ₹10 ஆயிரத்துக்கு மேல் மின்  கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடமிருந்து, காசோலை அல்லது வரைவோலை மூலமாக பணத்தை பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



  ₹10 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்துவோரிடம், அந்த தொகையை ரொக்கமாக பெறாமல் காசோலை அல்லது வரைவோலை மூலமாக அதிகாரிகள் பெற வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, இந்த புதிய நடைமுறைப்படி பல அலுவலகங்களில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.


இதற்கான அறிவிப்பை பொதுமக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில், ஆங்காங்குள்ள மின்வாரிய அலுவகங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.


அதில், ‘₹10,000க்கு மேல் பணம் செலுத்துவோர், காசோலை அல்லது வரைவோலை மூலமாக பணம் செலுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Give Us Your Feedback