ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம்... - புதிய சட்டத்திருத்த மசோதா
அட்மின் மீடியா
0
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. புதிய சட்டப்படி, எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்
# ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
# லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம்,
# ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிப்பது
# ஓட்டுநர் உரிமம் காலவதியாகி ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரு ஆண்டாக உயர்த்துவது.
# குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
# இன்சூரன்ஸ் நகல் இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்
# போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவோருக்கு ரூ.2 ஆயிரம்,
# அதிவேகமாக வாகன ஓட்டினால்ரூ.1000 முதல் ரூ.2000,
# சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ1000
# ஹெல்மெட் அணியாமல் சென்றால் ₹1000/-
# 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனையோடு ரூ.25 ஆயிரம் அபராதம், வாகன பதிவை ரத்து செய்தும் தண்டனை விதிக்க புதிய சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கிறது.
# போக்குவரத்து விதி மீறும் வாடகைக் கார் சேவை நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
# வாகனங்களில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20 ஆயிரம் அபராதம்
மேலும்
# சாலை விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைபவர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்படுள்ளது
இதுபோன்ற கண்டிப்பான அபராதத்தால் விபத்துக்களும், அதனால் பறிபோகும் விலைமதிப்பற்ற உயிர்களின் எண்ணிக்கையும் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது