Breaking News

ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்!

அட்மின் மீடியா
0
ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்தவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து வெறியாட்டம்!


மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட மறுத்த மதாரசா ஆசிரியரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து மர்ம கும்பல் வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளது.

சிறுபான்மையினரை குறிவைத்து இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் விடிய விடிய இஸ்லாமியர் ஒருவரை குறிவைத்து இதேபோல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலில் ஒரு கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டு சென்றது. அதே பெட்டியில் பயணித்த மதராசா ஆசிரியர் ஒருவரையும் அதேபோல் முழக்கமிட வலியுறுத்தியிருக்கிறது அக்கும்பல்.

அந்த ஆசிரியர் இதை ஏற்க மறுத்ததால் கொடூரமா தாக்கப்பட்டார். அத்துடன் ஓடும் ரயிலில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். அப்பகுதி பொதுமக்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


செய்தி உதவி
 


Give Us Your Feedback