Breaking News

வாட்ஸப்பில் வதந்தி பரப்புபவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி

அட்மின் மீடியா
0
வாட்ஸ்ஆப்பில் வதந்தி மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக புதிய வசதி ஒன்றை கொண்டு வர வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


வாட்ஸ்ஆப்பில் 'கைரேகை' பதிவு வசதி கொண்டு வர மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவவதற்கும் டிஜிட்டல் கைரேகை பதிவு அவசியம்.
தற்போது அனுப்பிய தகவலை, அனுப்பியவரே ஒரு மணி நேரத்திற்குள் அழித்து விடும் வசதி வாட்ஸ்ஆப்பில் உள்ளது. இதனால் குறிப்பிட்ட தகவலை முதலில் யார் அனுப்பியது என்பதை கண்டறிய இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளது.


வாட்ஸ்ஆப்பில் தற்போதுள்ள வசதியின்படி போலீசால் குறிப்பிட்ட தகவலை அனுப்பியவரின் புரோபைல் படம், மொபைல் எண், குரூப் உறுப்பினர்களின் பெயர்கள், தகவல் அனுப்பியவர் இருக்கும் இடம், அவர் அந்த தகவலை அனுப்பிய நேரம், ஐபி முகவரி உள்ளிட்டவைகளை மட்டுமே பெறவோ அல்லது கண்காணிக்கவோ முடியும்.

Tags: எச்சரிக்கை செய்தி

Share this