Breaking News

இலவச சேர்க்கை பள்ளிகளில் இன்று குலுக்க

அட்மின் மீடியா
0

இட ஒதுக்கீடு இலவச சேர்க்கை பள்ளிகளில் இன்று குலுக்க
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை விட அதிகளவு விண்ணப்பம் பெற்ற பள்ளிகளில், இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், இணையம் மூலம், சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதிப்பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், நுழைவுநிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஏப்., 22 முதல் மே 18 வரை பெறப்பட்டன.


விண்ணப்பித்த குழந்தைகள் பட்டியல், கடந்த மாதம் 30ல் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
இட ஒதுக்கீடு எண்ணிக்கையை விட, குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான குழந்தைகளுக்கு சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


இட ஒதுக்கீட்டை விட அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால், தகுதியான விண்ணப்பங்களுக்கு, 6ம் தேதி (இன்று) அந்தந்த பள்ளிகளில், குலுக்கல் முறையில், மாணவர்கள் சேர்க்கைக்காக தேர்வு செய்யப்படுவர்.


இதை அரசு அதிகாரிகள் கண்காணிப்பர். 

தகுதியுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்தப் பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும்.

Give Us Your Feedback