Breaking News

தமிழகத்தில் 24 மணி நேரமும் இனி எல்லாமே கிடைக்கும்..அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

 

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அனுமதி இல்லை. இதனால் இரவு 10 மணி அல்லது 11 மணிக்கு மேல் உணவுகள் கிடைக்காமல் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் தவித்து வருகிறார்கள். இதேபோல் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகள் எதற்கும் மக்கள் வெளியில் சென்று வாங்க முடியாத நிலையில் இருந்தனர். தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே இனிமேல் 10 மணிஆச்சு கடையை பூட்டு என்று எந்த கடையிலும் வந்து போலீசார் தொந்தரவு செய்ய வாய்ப்பு இல்லை. இதேபோல் மக்களும் 10 மணி அல்ல 11 மணி, 12 மணி என்றாலும் வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். இதேபோல் எந்த நேரமாக இருந்தாலும் விரும்பிய வகையில் , உணவுகளை வாங்கி சாப்பிடலாம். இதற்கான தடைகள் விலக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காகவே இரவு நேரங்களில் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. இனி யார் வேண்டுமானாலும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக வந்து செல்ல வாய்ப்பும் உள்ளது.
மேலும் சில விதிமுறையையும் வகுத்துள்ளது
ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும், 

கூடுதல் நேரம் தேவையெனில் ஒரு நாளைக்கு 10.30 மணி நேரமோ அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேலோ பயன்படுத்தக்கூடாது, 

வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும், 

இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்ற கூடாது, 

ஒரு வேளை அதற்கான அவசியம் இருந்தால்  அவர்களின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும் 

என்றும் அவ்வாறு பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாபு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Give Us Your Feedback