10 ரூபாய் காயின்களுமே செல்லும்.. வதந்திகளை யாரும் நம்பாதீங்க.
அட்மின் மீடியா
0
10 ரூபாய் செல்லாது வாங்க
மாட்டேன் அப்படி இனி யாரும் சொல்ல முடியாது..
10 ரூபாய் நாணயங்களை வாங்க வங்கிகள் மறுத்தால், வங்கிகள்
மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்துக்கு
ஏற்ப பொருளாதாரம் மற்றும் சமூகம், கலாச்சாரம் போன்றவற்றை மையமாக வைத்து நாணயங்கள்
வெளியிடப்படுகின்றன.
அந்த நாணயங்கள்
நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும். அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய
வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும்.
இத்தகைய சூழலில் சில
நேரங்களில் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
இதனால் வியாபாரிகள்,
பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் நாணயங்களை வாங்க
மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆக இனி யாரும் அப்படி யோசிக்க வேண்டாம்.
பொதுமக்கள் இதுபோன்ற
வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும்
சட்டப்படி செல்லும். அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: மறுப்பு செய்தி