இந்தோனேசிய இமாம் சமுத்ரா உடல் 10 ஆண்டுகளாக கெடாமல் உள்ளதாக பரவும் வதந்தி ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
இந்தோனேசிய இமாம் சமுத்ரா உடல் 10 ஆண்டுகளாக கெடாமல் உள்ளதா
வதந்தி பரப்பாதீர்கள்
இந்தோனேஷியா இமாம் சமுத்ராஉடல் 10 ஆண்டுக்குப்பின்னால் அண்ணாரின் புனித உடல் அப்படியே இருந்தது இப்படி சில பொய் செய்தி பலரும் ஷேர் செய்கின்றார்கள் இதன் உண்மை தன்மை என்ன
அந்த உடல் இமாம் சமுத்ராவின் உடல் இல்லை அது
சமுத்ரா என்பவர் இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி
இவருக்கு மரண தண்டனை கொடுக்கபட்டு அவரது உடல் அடக்கம் அடக்கம் செய்யபட்டுவிட்டது
அவர் உடல் அடக்கம் செய்யபட்ட இடம் அப்படியே தான் உள்ளது
ஆதாரம்
இமாம் அவர்களின் உறவினர்கள் அவரது கபூர் சென்று பார்த்தபோது
மேலும் அந்த வீடியோ பற்றி இந்தோனீசியா ஊடகங்கள் அது பொய் என்று அறிவித்துள்ளது
ஆதாரம்
வீடியோவில் உள்ள அந்த நபர் யாசிர் பின் தம்ரின் என்று அழைக்கப்படுகிறார், அவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் அவர் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார் அவர் ஜூலை 17, 2018 அன்று கல்லீரல் நோயால் இறந்தார்.
வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், சிறையில் இருந்து இந்தோனேசியாவின் தெற்கு டாங்கராங் (டாங்சில்) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவர் இறந்தார்
விடியோவை கவனித்தால் நமக்கு எழும் கேள்வி
அந்த வெள்ளை ஆடைகளில் ஒரு இடத்தில் கூடவா அடக்கம் செய்த மண் கறை படிய வில்லை
சரி அந்த துணி கூடவா 10 வருஷம் அப்படியே இருக்கும்
யோசிக்கமாட்டிங்களா கொஞ்சம் கூட சிந்திக்கும் தன்மை இல்லையா
எச்செய்தி வந்தாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து
பகிரவும்.முடியாவிட்டால் விட்டு விடவும்.பாவத்தில் சிக்காமாலிருக்க இது தான் வழி.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி