Breaking News

கேன்சர் என்பது நோயே இல்லை என்று ஷேர்செய்யப்டும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0

புற்றுநோய்_CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோய் என்பதுநோய் அல்ல #வியாபாரம்.என்றும் பி17 என்ற விட்டமின் குறைபாடே கேன்சர் என்றும் அதற்க்கு பி 17 விட்டமின் மாத்திரை சாப்பிட்டால் போதும் கேன்சர் குணமாகும் என்று என்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் செய்தி பகிரப்படுகிறது



புற்று நோய் என்பது நம் உடலில் மாறுபாடு அடைந்து அபரிமிதமாக வளர்ச்சி அடையும் செல்களையே புற்றுநோய் என்கிறோம். நம்முடைய உடலில் தினமும் ஆயிரக் கணக்கான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அவற்றை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
வைட்டமின் பி17 குறைபாட்டால் புற்றுநோய் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, காற்று மாசு, புற ஊதாக் கதிர்வீச்சு என புற்றுநோய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

அவரவர் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே, புற்றுநோய்க்கான வாய்ப்பு மாறுபடும். எனவே, வைட்டமின் பி17 குறைபாடு மட்டுமே காரணம் என்பது தவறு.
 ஆதாரம் 

நாம் ஆய்வு செய்து தேடி தெரியவந்த உண்மை
வைட்டமின் பி17 பற்றாக்குறைதான் புற்றுநோய்க்கு காரணம் என்பதற்கான ஆய்வு முடிவுகள் இல்லை.  

வைட்டமின் பி17 புற்றுநோயை குணப்படுத்தும் என்பதற்கான ஆய்வு முடிவுகள் இல்லை.


மேலும் புற்று நோய் என்பது ஆரம்ப நிலையில் இருந்தால் மட்டுமே குணப்படுத்தமுடியும் முற்றியநிலையில் இருந்தால் குணப்படுத்தமுடியாது. என்பதே உண்மை 

Tags: மறுப்பு செய்தி

Share this