வேளாண்மை பட்டப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 -ஆம் கல்வியாண்டுக்கான
இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக்
கல்லூரிகள் மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகளின் மூலம் இளம் அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை,
வனவியல், உணவு, உணவு முறை, பட்டு வளர்ப்பு, வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பவியல்,
சுற்றுச்சூழல் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
மாணவ-மாணவிகள், கீழ் உள்ள லின்ங் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக் கட்டணத்தையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2019
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை
ஜூன் 10 முதல் 12-ஆம் தேதிக்குள் 3 நாள்களில் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற
மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவர்.
கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும்