Breaking News

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா?

அட்மின் மீடியா
0

கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.



நடந்து முடிந்த ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்.

இந்நிலையில் கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன செய்திகள் பரவியது 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோமதி, "இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இப்படி ஒன்று பேசப்படுவதை நானே செய்திதாளை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். 

இதுகுறித்து தேசிய தடகள சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன். எதன் அடிப்படையில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டது என தெரியவில்லை" என கூறினார்.

ஆனால் அந்த செய்திகள் வதந்தி என்று மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோமதி மாரிமுத்தை சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி.

கோமதி மாரிமுத்து ஊக்குமருந்து பயன்படுத்தியதே இல்லை.

இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எந்த வித தகவல்களும் வரவில்லை,

என்று அவரின் சகோதரர் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

Share this