Breaking News

கருத்துகணிப்பா ? கருத்து திணிப்பா?

அட்மின் மீடியா
0
*கருத்துக்கணிப்பு உண்மையாகுமா???*




தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக் கணிப்புகள் கருத்து கணிப்பா *கருத்துத் திணிப்பா* என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்


முன்பெல்லாம் நாம் கருத்துக் கணிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அந்தக் கருத்துக் கணிப்புகள் 90% ஒத்துப் போகக் கூடியதாக இருக்கும்


ஆனால் சென்ற  தேர்தல்களிலும் இடைத்தேர்தல்களிலும் வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை கருத்து திணிப்பு என்று நம்மால் அறிந்து கொள்ள முடியும்


மக்களின் எண்னங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டிய கருத்து கணிப்பு
கருத்து திணிப்பாகவே உள்ளது என்பது வேதனைகுரியதாகவே உள்ளது


தொகுதிவெற்றி  கணக்கீட்டை பார்த்தால் கருத்து கணிப்பை வெளியிட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக  சொல்லியுள்ளார்கள் என்பதை பார்க்களாம்.


ஒரு சாமானியராக சில சந்தேகத்தை அட்மின் மீடியா மூலம் முன் மொழிகிறோம்.


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்படி வரையறுக்கப்படுகிறது???


19/05/2019 மாலை 6 வரை 59 தொகுதியில் வாக்கு பதிவு நடந்து முடிந்தது ஆனால் எப்படி அதே நாள் மாலை6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்படி வெளியிட முடியும்...?


6ம் கட்டமாக நடந்து முடிந்த தொகுதியில் வேண்டும் என்றால் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கனக்கீடு செய்ய கால நேரம் உள்ளது என்பதை சரி என்று ஏற்றுக் கொள்ளலாம்.


ஆனால் 7ம் கட்டமாக நடைபெற்ற 59 தொகுதியிலும் எத்தனை லட்சம் அல்லது எத்தனை ஆயிரம் நபரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு உடனடியாக எப்படி கனக்கீடு செய்ய முடியும் எதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை வெளியிடப்படுகிறது...?


அப்படியானால் முடிவுகள் முன்னரே எழுதப்பட்டு விட்டதா???


மேலும் மீடியாக்களின் கருத்துகணிப்பு எப்படி எடுக்கின்றார்கள்


ஒரு தொகுதியில் சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாய் வைத்து கொள்வோம்
அதில் வெறும் 500 நபர்கள் இடமே நடத்தப்படும் இந்த சர்வே உண்மையான சர்வே வாக இருக்க வாய்ப்பே கிடையாது.
இது மீடியாவினால் ஏற்படுத்தப்படும் ஒரு மாயை.....


ஏதோ ஒரு  கட்சிக்கு சார்பாக ஊடகங்கள் கருத்துக்களை மக்களிடம் தினிக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்???


தேர்தலில் செய்துவைத்திருக்கும் திருட்டுத்தனத்தை உறுதிசெய்ய ஆழம் பார்க்கும் முன்னோட்டமே  இந்த கருத்துத் திணிப்பு


அவனவன் மனசாட்சிக்கு தெரியும் யாரு பிரதமராக வரனும்னு அப்படி தான் எல்லாரும் ஓட்டு போட்டுருப்பாங்க.நீங்க இந்த கருத்துக்கணிப்புனு ஜால்ரா அடிக்காதிங்க.


எதையாவது சொல்லி எங்கள பரபரப்பாவே வச்சிருப்பீங்களா...


ஒரு பிரபல தனியார் தொலைகாட்சி சேனல் தொகுதி வாரியாக கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது அதில் அந்த தொகுதியில் போட்டியே இடாத கட்சிக்கு 6 % ஓட்டு விழுந்துள்ளது என்று தெரிவித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அப்படியானால் மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தாமல் சுயமாய் ஒரு கருத்து திணிப்பை மக்களிடம் திணிப்பது ஏன் என்ற கேள்வி எந்த ஒரு சாமணியனுக்கும் எழத்தான் செய்யும்


மக்களின் எண்ணம் என்ன என்பதை வருகின்ற 23ம் தேதி தேர்தல் முடிவுகள்  தீர்மானிக்கும்...


ப(பி)ணம் தின்னும் மீடியாக்களே மக்களின் கருத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள்.

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய


https://adminmedia1.blogspot.com/2019/03/blog-post_34.html

Share this