Breaking News

மீண்டும் பசு குண்டர்கள் அட்டுழியம் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இளஞர்களை தாக்கும் காட்சி

அட்மின் மீடியா
0
மத்திய பிரதேசம் சியோனி என்ற பகுதியில் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக பரவிய வதந்தியையடுத்து, ஒரு பெண் உட்பட 3 முஸ்லீம்கள், பசு பாதுகாப்பு குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலை நடத்தியவர்கள், "ஜெய் ஸ்ரீராம்" என்று, கோஷமிடச் சொல்லி தாக்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சியோனி என்றபகுதியில் இந்த தாக்குதல் நடைபெர்றதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில் கையில் கம்பு வைத்துள்ள சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக 4 பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Muslim youths thrashed by self styled Gau rakshaks
அப்பகுதியில் போகிறவர்கள் நின்று வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, யாரும் தடுக்க வில்லை இந்த தாக்குதலில் இஸ்லாமிய பெண்ணும் தப்பவில்லை என்பது பெரிய சோகமாகும்.
இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். 
மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. மோடி கடந்த முறை, ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவின் பல பகுதிகளில் பசு குண்டர்கள் இதுபோல தாக்குதல்களை நடத்தி வந்தனர். இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது
ஆதாரம்

Give Us Your Feedback