Breaking News

பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோ உண்மையா

அட்மின் மீடியா
0

பாஜக வெற்றி பெற்ற விரக்தியில் புலம்பிய மம்தா பானர்ஜி: வைரல் வீடியோ உண்மையா

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதால் விரக்தியடைந்து மிக மோசமாக நடந்துகொண்ட மம்தா பானர்ஜி  என்ற தலைப்பில் ஒரு வீடியோபலரும் ஷேர் செய்கின்றார்கள். அந்த வீடியோவில்  மம்தா பானர்ஜி ஆக்ரோஷமாக, வங்க மொழியில் கோஷம் போடுகிறார். மீடியாக்கள் அவரை சுற்றி வளைத்து பேட்டி எடுக்கின்றனர்.
அந்த வீடியோ உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டோம்


அந்த வீடியோ சம்பவம் 2006 ம் ஆண்டு நடந்தது மேலும் தற்போது உள்ளது போல 2006 ம் ஆண்டில் ஆன்லைன் வசதிகள் அதிகம் கிடையாது. எனவே, இதுபற்றிய செய்திகள் அப்போதே வெளியாகியிருந்தாலும், வீடியோ ஆதாரம் சற்று தாமதமாக, சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியிருக்கிறது..  மேலும் 25.11.2013 அன்று இந்த தளத்தில் வெளிவந்துள்ளது.

ஆதாரம் 1
 




2006ம் ஆண்டு ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை கண்டித்தும், சிங்கூர் பகுதியில் அமையவிருந்த டாடா தொழிற்சாலையை கண்டித்தும் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.  அப்போது சிங்கூர் பகுதிக்குள் அவரை நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர், தனது கட்சியினருடன் நேராக மேற்கு வங்க சட்டமன்றம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்டதுதான் அந்த வீடியோ
 
யாரோ சிலர் அந்த வீடியோவை தற்போது நடந்தது போல் கருத்திட்ட்டு பதிவிடுகின்றார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்




Tags: மறுப்பு செய்தி

Share this