இஸ்லாமியன் நீ பாகிஸ்தானுக்கு போ இஸ்லாமிய பெயர் வைத்திருந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்ட நபர்!
அட்மின் மீடியா
0
இஸ்லாமியன் நீ பாகிஸ்தானுக்கு போ இஸ்லாமிய பெயர் வைத்திருந்த வாலிபரை துப்பாக்கியால் சுட்ட நபர்!
பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முகமது குவசிம். இவர், அந்தப் பகுதியில் சோப்பு விற்பனை செய்யும் பணி செய்துவருகிறார்.
நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது அங்கு வந்த ராஜீவ் யாதவ் என்பவர், குவசிமை தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது அவர், என் பெயர் என்ன என்று கேட்டார். நான் எனது பெயர் குவசிம்பெயரைச் சொன்னதும், `நீ பாகிஸ்தானுக்கு போ' என்று கூறி என்னை துப்பாக்கியால் சுட்டார்’
மேலும், ‘அவர் என்னை மீண்டும் துப்பாக்கியால் சுடப் பார்த்தார். துப்பாக்கியை ரீலோட் செய்யும்போது, நான் அவரைத் தள்ளிவிட்டு ஒடிவிட்டேன். அப்போது, அங்கிருந்த யாரும் உதவிக்கு வரவில்லை.
ராஜீவ் யாதவ் துப்பாக்கியை மேல் நோக்கி சுட்டதால், எல்லோரும் பயந்துவிட்டனர்.
நான் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அவர்கள், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்’ என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ள அதே நேரத்தில், குற்றவாளி இன்னும் கைதுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
குண்டடிபட்டு ரத்தம் வழிய வழிய நடந்த சம்பவங்களை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டுள்ளார் குவசிம். இந்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.
கடந்த நான்கு தினங்களில், மூன்று இடங்களில் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது