மெக்கா மீது ஏவுகனை தாக்குதல் சவுதி வான்படை முறியடிப்பு
அட்மின் மீடியா
0
இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்கா நகரத்திற்க்கு
50 கிலோ மீட்டர் தொலைவில் ஹவுத்தி இனப்போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி
அரேபியா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்பட இருந்த பெரும் அழிவு
தடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின்
புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா
மாகாணத்தில் இருந்து ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுத்தி இனப்
போராளிகளால் வீசப்பட்ட அந்த ஏவுகணையை மெக்காவில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர்
தூரத்தில் சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்து நிறுத்தியதோடு, அதனை தாக்கி
அழித்துள்ளது. இதனால் அங்கு நிகழவிருந்த அழிவுகள் தடுக்கப்பட்டதாக சவுதி அரேபியா
தெரிவித்துள்ளது.
மேலும் ஜெட்டா நகரை குறிவைத்து வந்த மற்றொரு ஏவுகனையும் சவுதி வான்படை இடை மறித்து தாக்கி அழித்துள்ளது.
ஆதாரம்:
https://gulfnews.com/world/gulf/saudi-arabia-shoots-down-missiles-over-taif-and-jeddah-1.1558341584973
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
https://adminmedia1.blogspot.com/2019/03/blog-post_34.html
