Breaking News

வாட்ஸ்ஆப் உபயோகிப்பாளர்களே உடனே அப்டேட் செய்யுங்க

அட்மின் மீடியா
0

வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது,





என்னவென்றால் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், உடனடியாக உங்கள் வாட்ஸப்பை பிளே ஸ்டோரில் சென்று  அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது, அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் வாட்ஸ்ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ்ஆப் அழைப்பு கொடுக்கிறார்கள். அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது.


அதன்பின்பு செல்போனை ஹேக்கர்கள் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது,இந்நிலையில் தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ்ஆப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது, சமீபத்தில் வெளியான வாட்ஸ்ஆப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும், அதனை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்றும் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

Give Us Your Feedback