Breaking News

இலங்கையில் இஸ்லாமிய டிவிக்கும் தடை

அட்மின் மீடியா
0
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பை அடுத்து இஸ்லாமிய பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. 

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இலங்கை அரசு தீவிரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 இலங்கையில் இஸ்லாமிய பெண்களும் முகத்தை மூடும் எந்த வித ஆடைகளும் அணியக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு  ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு 
பொபேற்று இருந்தாலும் அவர்கள் இலங்கையில் உள்ளவர்களின் உதவி இல்லாமல் இதை செய்திருக்க முடியாது என்று இலங்கை அரசு நம்புகிறது.
இதனையடுத்து துபாயில் இருந்து ஒளிபரப்பாகும் பீஸ் டிவியை இலங்கையில் ஒளிபரப்ப கூடாது என்று கேபிள் டிவி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு முதல் இலங்கையில் பீஸ் டிவியின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Give Us Your Feedback