தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகளா
அட்மின் மீடியா
0
‘’தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தியில் கல்வெட்டு பதிக்கிறார்கள்,’’ என்று கூறி, ஒரு வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன.
அந்த செய்தி பொய்யானது
அப்படியானால் உண்மை என்ன
தஞ்சை பெரியகோயிலில் இந்தி கல்வெட்டு எதுவும் பதிக்கப்படவில்லை என, தொல்லியல் துறை சார்பாக தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்தது.
ஆதாரம்
வீடியோவில் குறிப்பிடப்படும் கல்வெட்டு எழுத்துகள், தேவநாகரி எழுத்துகள் என்றும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் இந்த கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளன என்றும், தொல்லியல் துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக, அந்த செய்தி ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, வதந்திகளில் கூறப்படுவது போல, இந்தி கல்வெட்டுகள் கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலும் தவறான ஒன்றாகும்.
அவை தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரட்டப்பட்ட கல்வெட்டுகளாகும். முக்கிய தகவல்கள் உள்ள காரணத்தால், அவற்றை கோயில் வளாகத்திற்குள்ளேயே தனி இரும்புக்கூண்டு நிறுவி பாதுகாத்து வருவதாகவும் தொல்லியல் துறை அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.
எனவே, உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும், அதுசார்ந்த வீடியோக்களிலும் கூறப்படுவதுபோல, தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டு எதுவும் பதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்படுகிறது.
மராத்தி மொழியில் உள்ள கல்வெட்டை எடுத்து, தற்போது புதியதாக நிறுவியது போல சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள் எனவும் அட்மின் மீடியா சார்பாக தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
Tags: மறுப்பு செய்தி
