வானம் மழை பொழிய பூமி நீரை உறிஞ்சியதா
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்
சிலர் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோகோ நாட்டில் ஒரு அதிசயம். என்றும் வானம் தண்ணீரைப் போன்ற மழையைப் பொழிந்தது, பூமி ஒரே நேரத்தில் தண்ணீரை உறிஞ்சுவதற்கு வாயைத் திறந்தது. இது நேற்று மட்டும் நடந்தது.
சிலர் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள டோகோ நாட்டில் ஒரு அதிசயம். என்றும் வானம் தண்ணீரைப் போன்ற மழையைப் பொழிந்தது, பூமி ஒரே நேரத்தில் தண்ணீரை உறிஞ்சுவதற்கு வாயைத் திறந்தது. இது நேற்று மட்டும் நடந்தது.
என்று ஒரு விடியோவையும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ உண்மையா
இது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்துவார்களே அதில் ஒரு தண்ணீர் திறக்கும் டேப்பை நூலில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள் மேலிருந்து எவ்வித பைப் கனெக்ஷன் இல்லாமல் தண்ணீர் வேகமாக வருவதை பார்த்து ஆர்ச்சயபட்டிருப்போம்,
ஆனால் உண்மை என்வென்றால் கீழே ஒரு தண்ணீர் நிறத்த தொட்டி வைத்து அதில் ஒரு சிறிய மின் மோட்டார் வைத்து அதில் கண்ணாடி பைப் வைத்து கீழுள்ள தண்ணீரை மேலே ஓட விடுவார்கள். இதை காணும் மேலே பைபிலிருந்து தண்ணீர் விழுவது போல இருக்கும்...
இதே போன்ற செயல் முறையில் தான் இந்த வீடியோவில் வரும் காட்சி.
வெள்ளம் பொழியும் குறிப்பிட்ட இடத்தை பார்த்தால் குழி போல தோண்டி, அதில் தண்ணீர் நிறைத்திருப்பது தெரியும்..
ஹை பிரஷர் வேகத்தில் மோட்டார் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலிருந்து மழை பொழிவதாக இருந்தால் இதன் அருகில் உள்ள மரங்களிலும் மழை வெள்ளம் பட்டிருக்க வேண்டும்.
மேலும் இந்த வீடியோ 2015 ல் எடுக்கப்பட்டது. இதே போன்று சீனா, இந்தோனீசிய, வியாட்நாமில் செய்யப்பட்டது.
கீழுள்ள லிங்கில் தெளிவான விளக்கம் உள்ளது.
Tags: மறுப்பு செய்தி
