Breaking News

யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ்" மனிதர்களா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
* யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ்" விரல் அளவில் உள்ள குள்ள மனிதர்கள் வீடியோ உண்மையா..?*

* அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தால் கீழே இருக்கும் விஷயங்கள் விளங்கும்.*

* 1. இந்த வீடியோவிற்க்கும் அரபி பயானுக்கும் எந்த சம்மதமும் இல்லை. யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் பற்றி உரையாடும் ஆடியோவை இந்த வீடியோவுடன் இணைத்துள்ளார்கள்*.


* 2. முதல் பாதியில் வரும் உருவத்திற்கும் இரண்டாவது பாதி உருவத்திற்கும் பல வேற்றுமைகள் உள்ளது.*


* 3. இரண்டாவது பாதியில் வரும் உருவத்தை உற்று நோக்கினால் அது குரங்கிற்கு உடை அணிந்து இருப்பது விளங்கும்*.


* 4. முதல் பாதியில் வருவது காட்டில் பிடிபட்ட குரங்கு இந்த வீடியோ கடந்த 5 வருடத்திற்கு முன்பே வைரலாக பரவியது,*


 ஆதாரம்..






 மேலும்  குரான் வசன ஆதாரம்..


*18:94, 22:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.*


*உலகம் அழியும் காலம் நெருங்கும் போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும்.* இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.


 இந்தக் கூட்டத்தினர் இனிமேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். *அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக்கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரையிலான வசனங்கள் கூறுகின்றன.*


*ஆதலால் இதைப் பரப்பாதீர்கள்!*
நாம் கேள்விப்பட்டதை ஆராயாமல் பரப்புவது அல்லாஹ்விடம் குற்றமாகும். ஆதலால் இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.


*அல்லாஹ்வின் எச்சரிக்கை :*


_நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்._


*(அல்குர்ஆன்  49:6)*


எனவே பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்


*உங்கள் குரூப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் இந்த செய்தி பொய்*


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback