Breaking News

இஸ்லாமிய புர்காவிற்க்கு தடையா

அட்மின் மீடியா
0

பாதுகாப்புக்கு தடையாகவுள்ள அனைத்து முகத் திரைகளுக்கும் இலங்கையில் தடை


அனைத்து வகையான முகத் திரைகளையும் பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு இலங்கை 
ஜனாதிபதி ஆத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.


தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத் திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இன்று முதல் அவசரகால சட்டத்தின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.


அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியானதும் நல்லிணக்கமானதுமான சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முகத்தினை மூடும் முகதிரைக்கு தான் தடை செய்யப்பட்டுள்ளது.

Give Us Your Feedback