Breaking News

சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறையா?

அட்மின் மீடியா
0
சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறையா? : ரிசர்வ் வங்கி விளக்கம்


ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வணிக வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்ற செய்தி தவறானது என்று ரிசா்வ் வங்கி  தொிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில், ஜூன் 1 -ஆம் தேதி முதல் அனைத்து வணிக வங்கிகளும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும், சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளதாக. சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இதனை ஆர்.பி.ஐ. தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கும்படி வணிக வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. அப்படி எந்தவிதமான உத்தரவையும் ஆா்.பி.ஐ பிறப்பிக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback