இலங்கையில் பர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது யார்
அட்மின் மீடியா
0
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பர்தா அணிந்த ஆண் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
"முஸ்லிம் பெண்ணை போன்று பர்தாஉடை உடுத்தியுள்ள புத்த சமயத்தை சேர்ந்த ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலுள்ள தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியவர்களில் இவரும் ஒருவர்" என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்ரது
அந்த வீடியோ கடந்த 29.08.2018 அன்று வெளியானது
ஆதாரம்
https://www.youtube.com/watch?v=k26YTw6bJnk
அந்த செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின்படி, இலங்கை தலைநகர் கொழும்புவை அடுத்துள்ள ராஜ்கிரியா பகுதியில் விசாரிக்கப்படும் நபர் பர்தா அணிந்து மூன்று சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவரை பார்த்து சந்தேகமடைந்த அதன் ஓட்டுநர், காவல்துறையினரிடம் தெரிவித்ததன் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை தற்போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சிலர் பகிர்ந்து வருகின்றார்கள்
Tags: மறுப்பு செய்தி
