ராமநாதபுரத்தில் தீவிரவாதிகள் உள்ளார்களா
அட்மின் மீடியா
0
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, தமிழக அரசை, பெங்களூரு போலீசார், 'அலர்ட்' செய்துள்ளனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும், பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில், இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
இச்சம்பவம் இலங்கையை மட்டுமின்றி, உலக நாடுகளையும் உலுக்கியது.
இலங்கையை தொடர்ந்து, நம் நாட்டின் முக்கிய மாநிலங்கள் மற்றும் நகரங்களில்,பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற, தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, அனைத்து நகரங்களிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை, 5:35 மணிக்கு, ஓசூரில் இருந்து லாரி டிரைவர் ஒருவர், பெங்களூரு போலீசாரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
தமிழ் மற்றும் அரைகுறை ஹிந்தியில் பேசிய அவர், 'தமிழகத்தின் முக்கிய நகரங்களில், குறிப்பாக, ரயில் நிலையங்களிலும் ரயிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள், 19 பேர், ராமநாதபுரத்தில் தங்கி உள்ளனர்' என, கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்டுஅதிர்ச்சி அடைந்த, பெங்களூரு போலீசார், உடனடியாக, தமிழக அரசுக்கும், தமிழக காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், போலீஸ் டி.ஜி.பி., - ரயில்வே போலீஸ்,
கடலோர காவல் படை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு, தமிழக அரசு பொதுத்துறையின் முதன்மை செயலர், 'பேக்ஸ்' வாயிலாக, அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடலோர காவல் படை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு, தமிழக அரசு பொதுத்துறையின் முதன்மை செயலர், 'பேக்ஸ்' வாயிலாக, அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தச் செய்தியில், 'சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, அனைத்து விதமான, முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். தேவையற்ற அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுங்கள்; இது, மிகவும் அவசரம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், முக்கிய இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; சந்தேகப்படும் இடங்களில், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், 'மக்கள் அச்சம் அடைய தேவையில்லை' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.-
