Breaking News

நெருங்கும் ஃபனி புயல்தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு!

அட்மின் மீடியா
0

நெருங்கும் ஃபனி புயல்தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு! 

சென்னையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைதான் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த மண்டலம் இன்று இரவு வலுவடையும். நாளை மாலைக்குள் இது புயலாக மாறும், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் அதே சமயம் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழு தாயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் உள்ளது. அரக்கோணத்தில் 4, சென்னையில் 2 என தமிழகத்தில் 6 தேசிய பேரிடர் மீட்புக்குழு இருக்கிறது.
Cyclone Fani: Disaster Management team all set to face the storm in TN
இந்த குழுக்கள் மொத்தமாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு படகுகள், அவசர சிகிச்சை மருந்துகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்
 தற்போதைய நிலவரப்படி வட மேற்கு திசையில் நகர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழகத்தின் கடற்கரை அருகில் வரக்கூடும். இதன் காரணமாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் ஏப்ரல் 26, 27 ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், ஏப்ரல் 28 முதல் 30 ஆம் தேதி வரை தென் மேற்கு கடற்கரை பகுதிக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Give Us Your Feedback